Thursday 26 January 2012

உனக்குள்ளே அமைதி

மக்குள்ளே  அமைதி என்பது எப்பொழுது வரும், முதலில் எப்போது போனது ஏன் போனது என அறிய வேண்டும், ஒரு பொருளை கண்டுபிடிக்க வேண்டுமெனில் அது எங்கே தொலைந்தது எப்படி தொலைந்தது என அறிய வேண்டும், ஒரு வேலை இந்த கேள்வி குழப்பமாக  அல்லது முட்டாள்த்தனமாக தோன்றலாம், காரணம் எதோ ஒன்றை சொல்வதாக கூறி எதோ ஒன்ற கூறி கொண்டிருக்கிறேன் என நினைக்கலாம் உண்மையில் உங்கள் இயல்பு நிலை என்பது அமைதி மற்றும் மகிழ்ச்சி.
சிறு வயதில் எப்படி இருந்தீர்கள் என்பதை உங்களால் தற்பொழுது இனி பார்க்க முடிகிறதா, எத்தனை அழகிய கனவுகள் கண்டு கொண்டிருந்தோம் ஆனால் தற்பொழுது எத்தனை கவலை பயம் ஏன் இப்படி, 


ஒரே ஒரு சிறு காரணம் இந்த நொடியை விட்டு விட்டு நமது மனம் எதிர்காலத்திலும் கடந்த காலத்திலும் சுழன்று  கொண்டிருப்பதே, 

இந்த நொடியில் நீங்கள் வாழ ஆரம்பித்து விட்டால் மனமற்று இருக்கலாம் எப்படி எனில் உங்களுக்கு பிடித்த வேலையை நீங்கள் மனமொன்றி செய்யும் பொது அந்த வேளையில் முழு கவனமும் இருக்கும் வேறு சிந்தனைகள் இருக்காது. 

மனம் நமது மீது ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் கடந்த கால மற்றும் எதிர்கால நினைவுகள் மற்றும் கனவுகள், இவை இரண்டுமே உங்கள் கைகளில் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் நீங்கள் விழித்து கொண்டு விட்டீர்கள்.

விமானங்களில் கூட சில நூறு கிலோ வரை மட்டுமே ஏற்றி செல்ல அனுமதி உண்டு. ஆனால் உங்கள் மனதை சற்று அலசி ஆராய்ந்து பாருங்கள் எத்தனை டன் கணக்கான கவலைகளை பயங்களை சுமந்து திரிகின்றீர்கள் என்பதை நீங்கள் பறக்க வேண்டுமெனில் உங்கள் லட்சியத்தை அடைய வேண்டுமெனில் தேவையற்ற சுமைகளை உதற தலைபடுங்கள்.
பூரண அமைதியை தேடி திரிய வேண்டியதில்லை உங்களுக்குள்ளே அது இருக்கிறது அடையாளம் காண வேண்டியது மட்டுமே உங்கள் வேலை, தேடி கூட கண்டடைய வேண்டியதில்லை என்பதுதான் வினோதம்,
உங்களை அறிவதால் அமைதி பெறலாம் ஏனென்றால் அமைதி என்பது மட்டுமே நமது இயல்பு.
அதற்க்கு முதலில்இந்த கணத்தில் வாழ பழகுங்கள்,கடந்த கால கசப்புகள் மற்றும் எதிர்கால கனவுகள் மூலம்  மனதிற்கு தீனி போடாதிர்கள், மனம் என்பது உங்கள் அடிமை அல்லது உங்கள் கைகளில் உள்ள கருவி என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை, காரணம் முடிந்த வரை கையில் இருப்பவற்றில் கவனம் செலுத்தி மனம் என்ற ஒன்ற வலிமை இழக்க செய்து மனதிற்கு அப்பால் உங்கள் தியான நிலை அதாவது அமைதி நிலைக்கு செல்லுங்கள்  

No comments:

Post a Comment