Wednesday 25 January 2012

உனக்குள்ளே

பெரும்பாலனவர்கள் நிம்மதி என்ற ஒன்றை தேடி எங்கெங்கோ அலைகின்றனர், முல்லாவின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது வெளியில் வெளியில் தொலைத்த ஒரு பொருளை வீட்டிற்குள் தேடுவார், அவரை போலவே நாமும் குருக்களிடமும் இன்னும் பலரிடமும் நிம்மதியை யாசித்து ஓடி கொண்டிருக்கிறோம், எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற கையறு நிலைக்கு இந்த அவசர வாழ்க்கை முறை நம்மை ஆட்படுத்தி விட்டது. 

புத்தரின்  மிக புகழ்பெற்ற ஒரு உபதேசம் அமைதியை வெளியில் தேடாதிர்கள் அது  உங்களுக்குள்ளே இருக்கிறது என்பதாகும், பலரும் தனக்குள்ளே தேட நேரமின்றி பல நூறு மைல்கள் சுற்றி அமைதியை தேடுவது சற்று வியப்பும் ஆச்சரியமும் அடைய செய்கிறது, இன்னும் சிலரோ தங்களுக்குள்ளே எப்படி தேடுவது என சரியான திசைக்காட்டி இன்றி தவிக்கிறார்கள் அதை தேடி கார்பரேட் குருமார்களிடம் சரணடைகின்றனர்.

நீங்கள் எந்த காரணத்தினால் உங்கள் அமைதியை இழந்து விட்டீர்கள் என ஒரு கணம் சிந்தித்ததுண்டா, அவ்வாறு இல்லையெனில் சற்று சிந்தியுங்கள் ஏதேனும் சில விஷயங்கள் பிடிபடும், அப்படியும் இல்லையெனில் இரண்டு காரணங்கள் மட்டுமே உங்கள் அமைதியை சீர்குலைக்கும் அது கவலை மற்றும் பயம் எதிர்காலம் குறித்த கவலை அல்லது பயம் அல்லது கடந்த காலம் குறித்த கவலை, இரண்டும் உங்கள் கைகளில் இல்லை கடந்த காலம் என்பது உங்கள் மனதின் படிமம், நீங்கள் எதிர்காலம் என நினைப்பது இந்த நொடியே தவிர வேறு இல்லை நேற்று நீங்கள் கனவு கண்ட எதிர்காலம் என்பதும் சரி இன்று நீங்கள் கனவு காணும் எதிர்காலமும் சரி இந்த நொடி மட்டுமே மற்றபடி அவற்றை உங்களால் அடைவதர்க்கில்லை,ஆங்கிலத்தில் இன்று என்பதற்கு பிரசென்ட் என பெயர், பிரசென்ட் என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு அது பரிசு இந்த நாள் உங்கள் பரிசு இதற்கும் அமைதிக்கும் என்ன உறவு தொடர்வோம் .



No comments:

Post a Comment